கடைசி நேரத்தில் கேன்சல் ஆனது வணங்கான்! காரணம் என்ன?

கடைசி நேரத்தில் கேன்சல் ஆனது வணங்கான்! காரணம் என்ன?
  • PublishedJanuary 10, 2025

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என தமிழ் சினிமாவில் பல மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்தவர் பாலா. அவர் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், தற்போது அவர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் வணங்கான்.

இப்படத்தை முதலில் சூர்யாவை நாயகனாக வைத்து இயக்கினார் பாலா. ஆனால் ஒரு மாதம் மட்டுமே ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், அப்படத்தில் இருந்து பாதியிலேயே விலகினார் சூர்யா. பாலா உடன் ஏற்பட்ட பிரச்சனையால் சூர்யா விலகியதாக சர்ச்சைகளும் வெடித்தன.

ஆனால் உண்மை என்னவென்றால் நடிகர் சூர்யாவை வைத்து சூட்டிங் நடத்த முடியவில்லையாம். கன்னியாகுமரி டூரிஸ்ட் ஸ்பாட் என்பதால் அங்கு சூர்யாவை வைத்து ஷூட்டிங் நடத்தினால் அவரைக் காண கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் அவர் இப்படத்தில் இருந்து விலகியதாக இயக்குனர் பாலாவே சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்தார்.

சூர்யா விலகிய பின்னர் அருண் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைத்து வணங்கான் படத்தை இயக்கினார் பாலா.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படத்தில் அருண் விஜய் உடன் சமுத்திரக்கனி, மிஷ்கின், ரோஷினி பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்களுக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

அதேபோல் பின்னணி இசையை சாம் சி.எஸ் போட்டிருக்கிறார். இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 10ந் தேதி ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழகத்தில் காலை 9 மணிக்கு இப்படத்தின் சிறப்பு காட்சியை திரையிடவும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று காலை 9 மணிக்கு வணங்கான் படத்தை காண தியேட்டருக்கு வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படத்தின் 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இப்படத்தை ரிலீஸ் செய்ய KDM இன்னும் கிடைக்கவில்லையாம். அந்த லைசன்ஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தான் வணங்கான் இதுவரை ரிலீஸ் ஆகவில்லையாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *