BREAKING ; “படங்களில் நடிக்க மாட்டேன்” அஜித் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் அஜித். இவரது நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன.
இந்த நிலையில், நடிகர் அஜித் துபாயில் நடக்கும் கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். இந்த ரேஸ் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், நடிகர் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அஜித் கார் ரேஸின் போது ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்.
அப்போது, பேசிய அஜித், செப்டம்பர் மாதம் வரை கார் ரேஸ் பந்தயம் நடைபெற உள்ளது. இந்த கார் ரேஸ் பந்தயம் முடியும் வரை நான் எந்தவொரு படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளதால் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து தற்போது அஜித்தும் இதேமாதிரியான தகவலை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.
ஆனால் செப்டம்பர் மாதம் வரை தான் இந்த இடைவெளி என்று கூறும்போது ரசிகர்களுக்கு சற்று அமைதியை கொடுத்துள்ளார்.