பாடகியிடம் வேலையை காட்டிய நடிகர் – குஷியில் பிரபலம்

பாடகியிடம் வேலையை காட்டிய நடிகர் – குஷியில் பிரபலம்
  • PublishedJanuary 15, 2025

இந்த உயர்ந்த நடிகர் பற்றிய பேச்சு தான் இப்போது பரபரப்பாக இருக்கிறது. பட ப்ரமோஷனுக்கு வந்த அவரைப் பார்த்து எல்லோருக்கும் அதிர்ச்சி தான்.

எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே என அனைவரும் பரிதாபப்பட்டனர். ஆனால் அந்த சர்ச்சை பாடகி மட்டும் ரொம்ப சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறாராம்.

கொஞ்சம் நெஞ்சம் ஆட்டமா ஆடின, உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என நெருங்கிய வட்டாரங்களிடம் சந்தோஷமாக சொல்லி சிரிக்கிறாராம்.

எதற்கு இப்படி ஒரு வன்மம் என பார்த்தால் எல்லாம் பழைய பகையாம். நடிகர் பாடகியிடம் கூட தன் வேலையை காட்டி இருக்கிறார்.

ஒருமுறை நடிகர் குடித்துவிட்டு பாடகியின் வீட்டிற்கு அவருடைய கணவரை தேடி சென்று இருக்கிறார். கணவர் வீட்டில் இல்லை என்று பாடகி சொன்ன பிறகும் கூட நடிகர் அந்த இடத்தை விட்டு அசையவில்லையாம்.

அதுமட்டுமின்றி நான் உள்ளே வரவா என கேட்டிருக்கிறார். இதனால் கடுப்பான பாடகி அவரைக் கண்டபடி திட்டி அனுப்பி விட்டாராம். அந்த கோபம்தான் இப்போது வரை அவருக்கு இருக்கிறது.

அதனால்தான் நடிகருக்கு ஒரு பிரச்சனை என்று தெரிந்ததும் இவர் குஷியாகிவிட்டார். ஆனால் நடிகரோ பட வெற்றி விழாவின் போது எனக்கு ஒன்றுமில்லை. நான் நன்றாக இருக்கிறேன் என பேட்டி கொடுத்து எதிர்ப்பாளர்களை அடக்கி விட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *