நயன், மாதவன், சித்தார்த்தின் “டெஸ்ட்” படத்திற்கு வந்த சோதனை
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாக்கியுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படம் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகாத நிலையில், நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில், Nayanthara: Beyond the Fairytale என்கிற ஆவணப்படம் மட்டுமே வெளியானது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் ‘டெஸ்ட்’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்கியுள்ளார். இப்படம் ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் காளி வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் தற்போது வெளியாகி உள்ள தகவலில் படி, ஜனவரி மாத இறுதிக்குள் ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட படக்குழு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
டெஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 என்கிற திரைப்படத்திலும் நயன்தாரா நடித்த முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படலாம். மேலும் மலையாளத்தில் டியர் ஸ்டுடென்ட்ஸ், கன்னடத்தில் உருவாகும் டாக்சிக், விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் இன்னும் பெயரிடாத திரைப்படம், ராக்காயி, MMMN போன்ற படங்கள் இவரின் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.