ரவி – ஆர்த்தி விவகாரத்து வழக்கு : நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

ரவி – ஆர்த்தி விவகாரத்து வழக்கு : நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
  • PublishedJanuary 18, 2025

நடிகர் ரவி – ஆர்த்தி தம்பதியினரிடையே கடந்த 2009 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால், பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ரவி , சென்னை குடும்பல நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், சமரச தீர்வு மையத்தில் இருவரும் 3 முறைக்குமேல் நேரில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சமரச பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தர் அழைத்திருப்பதாக, இருவரது வழக்கறிஞர்களும் நீதிபதியிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சமரச பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற பின்னர், வழக்கு விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும், வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 15 -ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *