அந்த போதைக்கு அடிமையான நயன் – விக்கி..! இது நீண்ட நாட்கள் நீடிக்காது
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து இப்போது தங்கள் கரியரில் கவனம் செலுத்திவருகிறார்கள்.
அதேபோல் தாங்கள் தொடங்கியிருக்கும் தொழில்களின் ப்ரோமோஷனிலும் தீவிரமாக கலந்துகொள்கிறார்கள். அப்படி அவர்கள் சமீபத்தில் மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அது பெரும் விமர்சனத்துக்கு வழிவகுத்தது.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களது நிறுவனமான ஃபெமி 9 கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக மதுரை சென்றனர். அப்போது அவர்கள் 6 மணி நேரம் தாமதமாக சென்றதாக பேச்சு எழுந்தது.
அதனையடுத்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அங்கு வந்திருந்த மக்களிடம் பேசுகையில், ‘மேடம் கஷ்டப்பட்டு வந்திருக்காங்க. அவங்க நார்மல் பீப்பிள் கிடையாது’ என்று கூறினார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டானது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸோ, நயனும், விக்னேஷ் சிவனும் நார்மல் பீப்பிள் இல்லையென்றால் ஏலியனா இல்லை சூப்பர் மேனா.
இதெல்லாம் கொஞ்சம் ஓவராக தெரியவில்லை என்று வறுத்தெடுத்துவிட்டனர். இந்நிலையில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு இந்த விவகாரம் குறித்து தனது காட்டமான கருத்தினை தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முன்வைத்திருக்கிறார்.
அவர் அளித்த பேட்டியில், “நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நார்மல் பீப்பிள் இல்லையென்றால் அவர்கள் என்ன அப்நார்மல் பீப்பிளா? இரண்டு பேரும் காலையில் எழுந்து இன்று என்ன செய்யலாம் என டிஸ்கஸ் செய்வார்கள் போல.
நயன்தாராவுக்கு ரிட்டையர்டு ஆகும் காலம் வந்துவிட்டது. மமிதா பைஜூ போன்றவர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள். எனவே தன்னை லைம் லைட்டில் வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அவர் செய்துவருகிறார்.
அந்த நோய் அவருக்கு வந்துவிட்டது. அதேபோல் புகழிலேயே இருக்க வேண்டும் என்று நினைத்து இரண்டு பேருக்கும் புகழ் போதைக்கு அடிமையாகிவிட்டார்கள். இது நீண்ட நாட்கள் நீடிக்காது” என்றார்.