ஹீரோயினுடன் உருவாகும் கைதி இரண்டாம் பாகம்..

ஹீரோயினுடன் உருவாகும் கைதி இரண்டாம் பாகம்..
  • PublishedJanuary 23, 2025

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் அறிமுகமான இவர் இதுவரை இயக்கிய 5 படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

அதுமட்டுமின்றி ஹாலிவுட் பாணியில் கோலிவுட்டில் லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸை உருவாக்கி அதை மையமாக வைத்து படங்களை எடுத்து வருகிறார் லோகேஷ். அதன்படி அவர் இயக்கிய கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்கள் எல்சியூவில் சேர்ந்திருக்கின்றன. தற்போது அவர் இயக்கத்தில் கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. ஆனால் அது எல்சியூ படம் இல்லை.

கூலி படத்தை முடித்ததும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் முதல் பாகம் கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை ருசித்தது.

அதுவும் தளபதி விஜய் நடித்த பிகில் படத்துக்கு போட்டியாக கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன கைதி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. அப்படத்தின் வெற்றிக்கு பின் சுமார் 6 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

கைதி படத்தின் சிறப்பம்சமே அதன் கதைக்களம் தான். விறுவிறுப்பான கதை இருந்ததால், ஹீரோயின் மற்றும் பாடல் இல்லாமல் அப்படம் வெளியாகி வெற்றிபெற்றது. கைதி படம் முடியும் போது நடிகர் கார்த்தி ஜெயிலுக்கு போகும் முன் என்ன செய்தேன் என்று யாருக்கும் தெரியாதே என்கிற வசனம் பேசியபடி நடந்து செல்வார்.

அவர் சிறை செல்லும் முன் என்னவாக இருந்தார் என்பதை மையக் கருவாக வைத்து கைதி 2 திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

கைதி முதல் பாகத்தில் கார்த்தியின் மகளை மட்டும் காட்டியிருப்பார்கள். அதன் இரண்டாம் பாகத்தில் கார்த்தி சிறை செல்லும் முன் மனைவியுடன் வாழ்ந்த காட்சிகளும் இடம்பெற உள்ளதாம். அதனால் ஹீரோயினுடன் கைதி இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளாராம் லோகேஷ் கனகராஜ்.

அதன்படி மலையாள நடிகை ரஜிஷா விஜயன் கைதி 2 படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஏற்கனவே நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சர்தார் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *