பல ஆண்டுகளுக்குப் பின் சமந்தா எடுத்த முக்கிய முடிவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்

பல ஆண்டுகளுக்குப் பின் சமந்தா எடுத்த முக்கிய முடிவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்
  • PublishedJanuary 27, 2025

நடிகை சமந்தா இனி சவாலான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என கூறியுள்ளார். ராஜ் & டிகே உடன் பணிபுரிந்தது தன்னை மாற்றியதாகவும், இனி அடிக்கடி திரையில் வரமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு வெளியான ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. அடுத்து ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடித்தார்.

‘பிருந்தாவனம்’ படத்தின் மூலம் தெலுங்கில் நடிகையாக அறிமுகமானார். அடுத்து ‘தூக்குடு’ படத்தில் நடித்தார். ‘எக் திவானா தா’ படத்தின் மூலம் இந்திக்குச் சென்றார்.

நானி – சமந்தா நடிப்பில் வெளியான ‘நான் ஈ’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ‘நீதானே என் பொன்வசந்தம்’ என தமிழில் கவனம் செலுத்தினார்.

தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கடைசியாக நடித்தார். அதன்பிறகு நடிக்கவில்லை. 2023-ல் வெளியான ‘குஷி’ படத்துக்குப் பிறகு திரையில் நடிக்கவில்லை.

இந்நிலையில் நீண்ட நாட்களாக மீடியாவில் இருந்து ஒதுங்கி இருந்த சமந்தா, சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்வில் பேசினார். அதில், இனிமேல் தனது படங்கள் எப்படியிருக்கும் என்பதை தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக மீடியாவில் இருந்து ஒதுங்கி இருந்த சமந்தா, சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்வில் பேசினார். அதில், இனிமேல் தனது படங்கள் எப்படியிருக்கும் என்பதை தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து படங்களில் நடிப்பது ரொம்ப சுலபம். ஆனால் ஒவ்வொரு படத்தையும் அதுதான் கடைசி படம் போல நடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார்.

“இனிமேல் சவாலான வேடங்களில் மட்டுமே நடிப்பேன். படங்களைத் தேர்ந்தெடுப்பதில் பலவிதமாக யோசித்து முடிவெடுக்கிறேன். அவசரப்படுவதில்லை” என்று கூறினார்.

இயக்குனர்கள் ராஜ் & டிகே உடன் பணிபுரிந்ததற்கு பதிலளித்த சமந்தா, “ஃபேமிலிமேன் 2, சிட்டாடல்: ஹனி பன்னி போன்ற படங்களில் பணிபுரிந்ததன் மூலம் தன்னை ஒரு நடிகையாக நிரூபிக்க முடிந்தது” என்று கூறினார். இதில் சவாலான பாத்திரங்களை ஏற்றதாகவும், ராஜ் & டிகே-யால் எல்லாவற்றையும் ஆழமாக பார்க்க கற்றுக்கொண்டதாகவும் சமந்தா கூறினார்.

இருவருமே தன்னை சவாலான வேடங்களில் நடிக்க வைத்ததாகவும், இதனால் இருவரும் தன்னை மாற்றிவிட்டதாகவும் சமந்தா ஜாலியாக கூறியுள்ளார்.

அவரின் இந்த சவால் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் முயற்சியால் மிகவும் சொற்ப படங்களே வெளியாக வாய்ப்புள்ளது. இதனால் அடிக்கடி திரையில் சமந்தாவை பார்க்க முடியாது என்பதால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *