NEEK 4 நாட்களில் நடத்தியுள்ள வசூல் வேட்டை

NEEK 4  நாட்களில் நடத்தியுள்ள வசூல் வேட்டை
  • PublishedFebruary 25, 2025

நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் தற்போது பிஸியாக இருக்கிறார் தனுஷ்.

தனுஷ் மூன்றாவதாக இயக்கிய திரைப்படம்தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த வாரம் வெளிவந்தது.

இப்படத்தின் மூலம் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மேலும் அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், நான்கு நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் உலகளவில் நான்கு நாட்களில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *