அயன் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சூர்யா இல்லை…
சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று அயன். இப்படத்தை மறைந்த இயக்குநர் கே வி ஆனந்த் இயக்க ஏவிஎம் நிறுவனம் தயாரித்து இருந்தார்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து தமன்னா, பிரபு, ஜெகன், அக்ஷதீப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

தமிழ் சினிமாவில் வெளிவந்த ஒன் ஆஃப் தி பெஸ்ட் ஆக்ஷன் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சூர்யா இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் அயன் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் ஜீவா தானாம். இந்த தகவலை நடிகர் ஜீவா சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
