பட வாய்ப்பு இல்லாததால் இதுபோன்று நடிக்கிறாரா சமந்தா???

அழகும், திறமையும் நிறைந்த நடிகை தான் சமந்தா. விஜய், சூர்யா என டாப் நடிகர்களுடன் நடித்திருந்தார். அதன் பிறகு நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
சில காரணங்களினால் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். ஆனாலும் சினிமாவில் சமந்தா கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இன்னும் பிரபலமானார்.
அதன் பிறகு அவருக்கு மையோசிட்டிஸ் நோய் ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இதனால் படங்களில் நடிப்பதையும் குறைத்து கொண்டார். கடைசியாக சமந்தா நடிப்பில் சிட்டாள் வெப் சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்சமயம் புதிய படம் ஒன்றில் கேமியோ தோற்றத்தில் சமந்தா நடித்துள்ளாராம். பிரவீன் கந்த்ரேகுலா இயக்கத்தில் உருவாகும் படம் தான் பரதா. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரர் நடித்து வருகிறார்.
மேலும் சமந்தா மற்றும் அனுபமா இருவரும் அ ஆ என்ற படத்தில் இதற்கு முன்னதாக ஒன்றாக நடித்திருக்கின்றனர். இப்போது மீண்டும் பரதா படத்தில் இணைந்து நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது.
ஆனால் சமந்தா கேமியோ தோற்றத்தில் நடிப்பதால் அவருக்கு பட வாய்ப்பு இல்லாததால் இதுபோன்று நடிக்கிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அனுபமா உடன் நட்பு காரணமாகத்தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தாராம்