பர்தா அணியும் கிராமத்து பெண்களாக அனுபமா, சமந்தா

பிரேமம் படத்தில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், அதன்பிறகு தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் அறிமுகமானார்.
பின்னர் தள்ளிப் போகாதே, சைரன், டிராகன் போன்ற படங்களில் நடித்தவர் தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் மற்றும் லாக் டவுன் போன்ற படங்களில் நடிக்கிறார்.
அடுத்து பரதா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். கிராமத்து கதையில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் சமந்தா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பர்தா அணியும் கிராமத்து பெண்கள் குறித்த கதையில் இந்த படம் தயாராகி வருவதால் ஒரு மெசேஜ் சொல்லும் வேடத்தில் சமந்தா நடித்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.