அந்த இயக்குனர் மீது நடிகை ஷாலினி பரபரப்பு குற்றச்சாட்டு…

அந்த இயக்குனர் மீது நடிகை ஷாலினி பரபரப்பு குற்றச்சாட்டு…
  • PublishedApril 2, 2025

சில வருடங்களுக்கு முன் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த படமாக அமைந்தது அர்ஜுன் ரெட்டி.

கடந்த 2017ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நாயகனாக விஜய் தேவரகொண்டா நடிக்க நாயகியாக தனது முதல் படத்தில் நடித்திருந்தார் ஷாலினி பாண்டே.

அதன்பின் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என படங்கள் நடித்து வந்தாலும் அவருக்கு முதல் படம் கொடுத்த ரீச் வேறு எந்த படத்திலும் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.தற்போது தமிழில் இவர் இட்லி கடை படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ஷாலினி பாண்டே சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதில் அவர், கேரவனில் உடை மாற்றும் போது கதவை தட்டாமல் உள்ளே வந்தார்.

எனக்கு அப்போது 22 வயதுதான் என்றும் கோபத்தில் தான் இயக்குனரை வெளியே போகச் சொல்லி கத்தியதாகவும் ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார். அவர் கூறியது தெலுங்கு பட இயக்குனர் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *