சூர்யாவின் 46வது படமாக வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்

சூர்யாவின் 46வது படமாக வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்
  • PublishedApril 6, 2025

நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‛வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

இதற்கிடையில் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

இதனை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இது சூர்யாவின் 46வது படமாக உருவாகிறது.

ஏற்கனவே இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார் என கூறப்பட்டது. இந்தியாவில் முதல் இன்ஜின் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை குறித்த கதைகளம் என கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க அழகான காதல் கதையை மையப்படுத்தி உருவாகிறது என புதிய தகவலை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *