நயன்தாரா கேட்ட சம்பளத்தை கேட்டு தலை சுற்றிப்போன தயாரிப்பாளர்

நயன்தாரா கேட்ட சம்பளத்தை கேட்டு தலை சுற்றிப்போன தயாரிப்பாளர்
  • PublishedApril 29, 2025

நடிகை நயன்தாரா இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் கடைசியாக டெஸ்ட் திரைப்படம் வெளிவந்தது. நேரடியாக ஓடிடியில் வெளிவந்த இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

படுதோல்வியை சந்தித்தது. நயன்தாரா கைவசம் தற்போது டாக்சிக், மண்ணாங்கட்டி, Dear Students, MMMN, மூக்குத்தி அம்மன் 2, Hi என பல திரைப்படங்கள் உள்ளன.

இந்த நிலையில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில்அனில் ரவிபுடி இயக்கத்தில் புதிய படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என நினைத்து, நயன்தாராவிடம் இப்படம் குறித்து பேசியுள்ளனர்.

படத்தின் கதையை கேட்ட நயன்தாராவை நடிப்பதற்கு ஓகே கூறியுள்ளார். ஆனால், இப்படத்தில் நடிக்க 18 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இது தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வழக்கமாக நயன்தாரா ரூ. 10 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படும் நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 18 கோடி சம்பளம் கேட்டுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *