சசிகுமார் அடுத்து இயக்கப்போகும் படம் குறித்து அப்டேட்

சசிகுமார் அடுத்து இயக்கப்போகும் படம் குறித்து அப்டேட்
  • PublishedApril 29, 2025

திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் சசிகுமார். பாலாவிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து பின் சினிமாவில் இயக்குநராக களமிறங்கினார்.

‘சுப்ரமணியபுரம்’ என்ற படத்தை இயக்கியும், நடித்தும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்ததால் பிரபல நடிகராக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.

இந்த படத்தின் வெற்றிக்கு பின் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன்,உடன்பிறப்பே, எம்ஜிஆர் மகன், அயோத்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பை தாண்டி இயக்கத்திலும் கவனம் செலுத்தி வரும் சசிகுமார் பேட்டி ஒன்றில் அவர் அடுத்து இயக்கப்போகும் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

அதில், ” நான் ஒரு பீரியட் படத்தை எடுக்கப் போகிறேன். அதன் படப்பிடிப்பை 2026-ல் தொடங்குவேன். அதில் ஒரு ரோலில் நானும் நடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *