2ஆவது திருமணமா? விளக்கம் கொடுத்தார் மேக்னா ராஜ்

2ஆவது திருமணமா? விளக்கம் கொடுத்தார் மேக்னா ராஜ்
  • PublishedMay 2, 2025

கணவர் இறந்து 5 வருடங்கள் கடந்த நிலையில் 2ஆவது திருமணம் குறித்த வதந்திக்கு மேக்னா ராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.

தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்தார். 10 வருட காதல் வாழ்க்கைக்கு பிறகு கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மற்றும் மேக்னா ராஜ் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால், திருமணமாகி 2 ஆண்டுகளில் இவரது காதல் கணவரும், கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் காதல் கணவர் இறந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு, மேக்னா ராஜ் 2 ஆவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து மேக்னா ராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, எனக்கு நீயே வேண்டும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் கணவர் என்று பதிவிட்டுள்ளார். இனிமேல் அவரது வாழ்க்கையில் 2ஆவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது இந்த போஸ் மூலம் தெளிவாக தெரிகிறது. தனது மகனை உலகமாக நினைத்து இப்போது வாழந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *