விஜய் டிவியின் பில்லர் பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் டிவியின் பில்லர் பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
  • PublishedMay 5, 2025

சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் விஜய் டிவி மிகப்பெரிய பங்கை கொடுத்து வருகிறது.

நிகழ்ச்சிகள் எல்லாம் வெற்றிகரமாக மக்களிடம் பிரபலமாக ஆனதற்கு முக்கிய காரணம் போட்டியாளர்கள் ஒரு வகையில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்கள், அவர்களுக்கான தனித்துவத்தை காட்டும் விதமாக சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

அதனால் தான் பல வருடங்களாக நீயா நானா நிகழ்ச்சியை கோபி மட்டும் நடத்தி வெற்றியை கொடுத்து வருகிறார்.

இவரை தொடர்ந்து பிரியங்கா மற்றும் மாகாபா எந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் அது வெற்றி தான் என்று சொல்லும் அளவிற்கு ஹிட் கொடுத்து விடுகிறார்கள்.

இப்படி இந்த மூன்று தொகுப்பாளர்கள் இருக்கும் வரை விஜய் டிவியில் சரிவே இல்லை என்பதற்கு ஏற்ப பில்லர் ஆக இருந்து பாடுபடுகிறார்கள்.

இந்த நிலையில் பிரியங்கா தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சூழ்நிலையில் டிஜே வசி என்பவரை காதலித்து சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டார். அந்த வகையில் விஜய் டிவியில் இருந்து பிரியங்கா விலகிவிட்டார் என்று தகவல் வந்த நிலையில் அது எல்லாம் பொய், பிரியங்கா இல்லை என்றால் விஜய் டிவி இல்லை என்பதற்கு ஏற்ப திரும்ப வந்து விட்டார்.

இப்படி எந்நேரமும் விஜய் டிவிக்காக பாடுபடும் பிரியங்காவின் சம்பளம் என்னவென்று தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் ஒரு எபிசோடுக்கு பிரியங்காவின் சம்பளம் 2.5 லட்சம் ரூபாய். அதனால்தான் வேறு எங்கேயும் போகாமல் விஜய் டிவியை கதி என்று இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *