சந்திரமுகி கதையை நிராகரித்த பிரபல நடிகர்

சந்திரமுகி கதையை நிராகரித்த பிரபல நடிகர்
  • PublishedMay 30, 2025

நடிகர் ரஜினியின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த திரைப்படம் சந்திரமுகி.

கடந்த 2005ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தமிழில் மட்டுமில்லாது தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

பி.வாசு அவர்கள் இயக்கிய இந்த படத்தில் ரஜினியுடன், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, நாசர், வடிவேலு, வினீத் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

படத்தின் கதையே சூப்பர், பாடல்கள் அதற்கு மேல் செம ஹிட் தன். 20 ஆண்டுகளுக்கு முன்பே ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை செய்துள்ளது.

இந்த படக்கதையை பி.வாசு முதலில் தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவை வைத்து தான் உருவாக்க நினைத்துள்ளார். ஆனால் இந்த கதையை தெலுங்கு ஹீரோ நிராகரித்ததால் ரஜினியிடம் வந்துள்ளது.

செம ஹிட்டடித்த சந்திரமுகி கதையை நிராகரித்தது எந்த ஹீரோ தெரியுமா, அவர் வேறுயாரும் இல்லை தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தானாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *