எனக்கு அவருடன் நடிக்க ஆசை : 40 வயதில் த்ரிஷாவுக்கு வந்த ஆசை

எனக்கு அவருடன் நடிக்க ஆசை : 40 வயதில் த்ரிஷாவுக்கு வந்த ஆசை
  • PublishedJune 1, 2025

சினிமாவில் 40 வயதை கடந்தும் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார் திரிஷா. தமிழ் சினிமாவில் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கிறது.

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து லியோ, விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் என தொடர்ந்து கலக்கி வருகிறார். இப்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45வது படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த சூழலில் ஜூன் 5ஆம் தேதி தக் லைஃப் படம் வெளியாக உள்ளதால் அதற்கான பிரமோஷனில் திரிஷா கலந்து கொண்டு வருகிறார். அதில் பிரபல நடிகருடன் தனக்கு நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக திரிஷா கூறியிருக்கிறார்.

வில்லன் நடிகருடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் திரிஷா
அதாவது இப்போது தமிழில் பல படங்களில் வில்லனாக மிரட்டி வருகிறார் பகத் பாசில்.

அவருடைய கதை தேர்வு ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. விக்ரம், புஷ்பா, வேட்டையன் மற்றும் மாமன்னன் என அவரது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் தமிழில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த சூழலில் த்ரிஷா பகத் பாசிலுடன் நடிக்க வேண்டும் என்பது தான் தன்னுடைய ஆசை, இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை என்று கூறி இருக்கிறார்.

மேலும் அவர் எந்த மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தாலும் அற்புதமாக நடிப்பார். அவருடன் ஒரு படத்திலாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்று திரிஷா கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் எல்லோருடனும் நடித்த திரிஷாவுக்கு பகத் பாசிலுடன் நடிக்க வேண்டும் என்ற கனவும் விரைவில் நிறைவேற வாய்ப்பு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *