என்ன ஆனாலும் சந்தோஷமாக நிம்மதியாக இருப்பேன்…தனுஷ்

என்ன ஆனாலும் சந்தோஷமாக நிம்மதியாக இருப்பேன்…தனுஷ்
  • PublishedJune 2, 2025

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இயக்கத்தில் கடைசியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியானது.

தற்போது இட்லி கடை என்ற படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார். இயக்கத்தை தாண்டி தனுஷ் ஹீரோவாக மட்டும் நடித்துள்ள படம் குபேரா.

சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜுன் மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், “ஒரு 4 வதந்தியை பரப்பிவிட்டு என்னை காலி செய்து விடலாம் என்று கனவில் கூட நினைக்காதீர்கள். ஏனென்றால் ஒரு செங்கலை கூட உங்களால் அசைக்க முடியாது.

நான் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வக்கு இல்லாமல் இருந்திருக்கிறேன். இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன்.

எந்த நிலையாக இருந்தாலும் சரி சந்தோஷமாக நிம்மதியாக இருப்பேன். ஏனென்றால் சந்தோஷத்தை வெளியில் தேட முடியாது. வாழ்க்கையில் சந்தோஷமும், நிம்மதியும் தான் மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *