தக்லைப் படத்திற்காக சிம்பு வாங்கிய சம்பளம்… இத்தனை கோடிய?

தக்லைப் படத்திற்காக சிம்பு வாங்கிய சம்பளம்… இத்தனை கோடிய?
  • PublishedJune 4, 2025

மணி ரத்னம் இயக்கத்தில் சிம்பு முதன் முதலில் நடித்த திரைப்படம் செக்க சிவந்த வானம். இப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக மணி ரத்தினத்துடன் சிம்பு கூட்டணி அமைத்திருக்கும் படம் தக் லைஃப்.

இப்படத்தில் கமல் ஹாசனுடன் சிம்பு முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற 5ம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் கமல் ஹாசனுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்க நடிகர் சிம்பு ரூ. 40 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

அவருடைய திரையுலக வாழ்க்கையில் வாங்கிய அதிக சம்பளம் இதுவே என்கின்றனர். கமலுக்கு நிகரான கதாபாத்திரம் என்பதால்தான் இவ்வளவு பெரிய சம்பளம் சிம்புவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *