விராட் கோலியை அவசரமாக திருமணம் செய்த காரணத்தை கூறிய அனுஷ்கா

விராட் கோலியை அவசரமாக திருமணம் செய்த காரணத்தை கூறிய அனுஷ்கா
  • PublishedJune 8, 2025

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா போல் வேறு எந்த பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்களும் பிரபலமடையவில்லை. அனுஷ்கா சர்மா – விராட் கோலி இந்தியாவின் மிகவும் அழகான ஜோடிகளில் ஒன்றாக இருக்கிறார்கள். 2017ல் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அனுஷ்கா சர்மா, தனக்கு 30 வயது ஆவதற்கு முன்பே விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக அனுஷ்கா சர்மா அளித்த பேட்டியொன்றில் 30 வயதுக்குள் திருமணம் செய்ய காரணம் என்ன என்பதை கூறியிருக்கிறார்.

அதில், நான் 29 வயதிலேயே திருமணம் செய்து கொண்டேன். அதற்கு காரணம் எங்களுக்குள் இருந்த காதல் தான். நாங்கள் இருவரும் மனதார ஆழமாக நேசித்தோம்.

விரைவில் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என முடிவு எடுத்து திருமணம் செய்து கொண்டதாக அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார். விராட் – அனுஷ்கா ஜோடிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் பிறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *