மகளுடன் சென்று ரஜினிகாந்தை சந்தித்த வனிதா விஜயகுமார்…

மகளுடன் சென்று ரஜினிகாந்தை சந்தித்த வனிதா விஜயகுமார்…
  • PublishedJune 10, 2025

வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. திரைப்படம் மஞ்சுளாவின் பிறந்தநாளான ஜூலை 4-ம் தேதி வெளியாக உள்ளது.

படம் வெளியாவதை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வனிதா வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.

தற்போது வனிதா இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கி நடித்துள்ள திரைப்படம் தான் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. இந்தப் படத்திற்கு வனிதாவே திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. இந்த நிலையில் வனிதா தனது தாயாரின் பிறந்தநாளான ஜூலை நான்காம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வீட்டிற்குச் சென்ற அவர், ரஜினியின் கைகளால் படத்தின் வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த புகைப்படங்களை வனிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *