கமலுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் டாப் நடிகை…யார் தெரியுமா?

கமலுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் டாப் நடிகை…யார் தெரியுமா?
  • PublishedJune 13, 2025

நடிகர் கமல் ஹாசன் உலகப் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வியடைந்த நிலையில், தக் லைஃப் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், இப்படமும் தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. அடுத்ததாக ஸ்டண்ட் மாஸ்டர் அன்பு அறிவு இயக்கத்தில் தனது 237வது திரைப்படத்தில் கமல் நடிக்கவுள்ளார். இதற்கு முன் இந்தியன் 3 திரைப்படம் வெளிவரவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கு கண்டிப்பாக தங்களுக்கு பிடித்த நடிகர்கள், நடிகைகளுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கும்.

அந்த வகையில் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மிருணாள் தாகூர், கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதில் “எனது சிறு வயதில் இருந்தே கமல் ஹாசன் சாரை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன். குறிப்பாக அவருடன் நடனமாட நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *