விமான விபத்தால் “குபேரா” ட்ரைலர் வெளியீட்டு விழா ரத்து… குவியும் பாராட்டு

விமான விபத்தால் “குபேரா” ட்ரைலர் வெளியீட்டு விழா ரத்து… குவியும் பாராட்டு
  • PublishedJune 13, 2025

நேற்றைய தினம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் அகமதாபாத் விமான விபத்து தான். 242 பேருடன் நேற்று லண்டன் புறப்பட்ட விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்கும் உள்ளாகி நொறுங்கியது.

இதில் ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பி இருக்கிறார்.

இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது வருத்தத்தை ட்விட்டர் வாயிலாக தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதன் எதிரொலியாக குபேரா தயாரிப்பாளர் தனது பட விழாவை ரத்து செய்து இருக்கிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கிறது குபேரா படம்.

நாகார்ஜுனா, ராஸ்மிகா மந்தனா போன்ற பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாந்த் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள நிலை வருகின்ற ஜூன் 20ஆம் தேதி குபேரா தியேட்டரில் வெளியாக உள்ளது. இதற்கான தியேட்டர் வெளியீட்டு விழாவை நாளை ஜூன் 13 நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விழாவிற்காக முக்கிய பிரபலங்களை சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் நேற்று நடந்த விமான விபத்து காரணமாக தயாரிப்பாளர் குபேரா ட்ரைலர் வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

மேலும் குபேரா டிரைலர் நேரடியாகவே ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த துயர சம்பவத்தால் தனது படத்தின் விழாவை தயாரிப்பாளர் ரத்து செய்யப்பட்டு இருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அமேசான் இந்த மாதமே குபேரா படத்தை வெளியிட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்ததால் படம் அவசரமாக வெளியாகுவதாக கூறப்பட்டது. கண்டிப்பாக தனுஷுக்கு குபேரா படத்திலிருந்து பெரிய வெற்றியை கொடுக்கும் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *