அதல பாதாளத்திற்கு சென்ற லைகா… தப்பி ஓடிய MMM

அதல பாதாளத்திற்கு சென்ற லைகா… தப்பி ஓடிய MMM
  • PublishedJune 14, 2025

ஒரு காலத்தில் தயாரிப்பில் கொடி கட்டி பறந்தவர்கள் லைக்கா நிறுவனம். பல பெரிய பட்ஜெட் படங்களை தடையின்றி தட்டி தூக்கினார்கள்.

ஆனால் ஆணைக்கும் அடி சறுக்கும் என்பது போல் இவர்களின் நிலைமை இப்பொழுது அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

பல பெரிய பட்ஜெட் படங்களை ஒருசேர கமிட் செய்து தோல்வி கண்டது லைக்கா நிறுவனம். வேட்டையன், இந்தியன் 2, விடாமுயற்சி என 300 கோடிகளுக்கு மேல்தான் படங்களை தயாரித்தனர்.

இந்த படங்கள் எல்லாம் அவர்களுக்கு லாபகரமாக அமையவில்லை. ஹீரோக்களுக்கும் குறைந்தது 150 கோடிகள் சம்பளம் கொடுக்க வேண்டியதாக இருந்தது.

இப்படி லைக்கா படுற கஷ்டத்தை பார்த்த தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரித்த ஒரே படத்தோடு கம்பி நீட்டி விட்டார்கள்.

அஜித்தை வைத்து குட் பேட் அக்லீ படத்தை தயாரித்திருந்தனர். இந்த படம் அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் அடுத்து எந்த ஒரு படமும் கமிட் ஆகாமல் ஒதுங்கி இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *