விஜய் தேவரகொண்டாவுடனான காதலை உறுதி செய்த ராஷ்மிகா?

விஜய் தேவரகொண்டாவுடனான காதலை உறுதி செய்த ராஷ்மிகா?
  • PublishedJune 16, 2025

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார். அடுத்து பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

இவர் தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வரும் தகவல் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இந்த செய்தியை இதுவரை இவர்கள் மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை.

தற்போது, ராஷ்மிகா, தனுஷ் ஜோடியாக குபேரா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 20 – ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் ராஷ்மிகாவிடம், தனுஷ் மற்றும் நாகர்ஜூனாவிடம் இருந்து எந்த விஷயங்களை எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, நாகர்ஜூனாவின் வசீகரத்தையும் தனுஷின் நடிப்பு, இயக்கம், நடனத்தையும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

பின், விஜய் தேவரகொண்டாவிடம் இருந்து என்று கேள்வி வர, ‘ அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *