விஜயின் பிறந்தநாள் – த்ரிஷா இப்ப என்ன போஸ்ட் போட்டு இருக்காங்க தெரியுமா?

விஜயின் பிறந்தநாள் – த்ரிஷா இப்ப என்ன போஸ்ட் போட்டு இருக்காங்க தெரியுமா?
  • PublishedJune 23, 2025

விஜயின் பிறந்தநாள் – த்ரிஷா இப்ப என்ன போஸ்ட் போட்டு இருக்காங்க தெரியுமா?நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் மற்றும் அவர் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என பாலரும் பல நல்ல விஷயங்களை செய்து விஜய் பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை த்ரிஷா விஜய்க்கு வாழ்த்து கூறி பதிவிட்டு இருக்கிறார்.

த்ரிஷாவின் செல்ல நாயை தூக்கு விஜய் கொஞ்சும் போட்டோவை வெளியிட்டு இருக்கும் த்ரிஷா “Happy Birthday bestest” என கூறி இருக்கிறார்.

நடிகர் விஜய் பிறந்தநாளன்று வாழ்த்து தெரிவித்து நடிகை திரிஷா சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து திரிஷா வெளியிட்ட புகைப்படத்தில் இருவரும் லிஃப்டில் ஒன்றாக செல்பி எடுத்திருந்தனர். அப்போது இருவரும் சொகுசு கப்பலில் சென்றபோது எடுத்த புகைப்படம் அது என நெட்டிசன்கள் டீகோடு செய்தனர்.

அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட சிலர் விஜய்யும், திரிஷாவும் காதலிக்கிறார்கள் என்றும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து புயலை கிளப்பினர். விஜய்யுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். ஆனால் அவருக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆனதால் அவரைப்பற்றிய கிசுகிசுக்கள் சற்று ஓய்ந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *