சர்ப்ரைஸாக வெளிவந்தது கூலி படத்தின் அப்டேட்…

சர்ப்ரைஸாக வெளிவந்தது கூலி படத்தின் அப்டேட்…
  • PublishedJune 23, 2025

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் ஒரு குத்துப் பாடலை பாடி இருக்கிறார். சிக்கிட்டு என தொடங்கும் அப்பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்பகனவே வெளியாகி இணையத்தில் படு வைரலானது.

இந்த நிலையில், அந்த பாடலின் முழு வெர்ஷனையும் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியிட உள்ளனர். இதனை கடந்த வாரமே ரிலீஸ் செய்ய இருந்தனர். ஆனால் சில காரணங்களுக்காக அந்த பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் இந்த வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.

இப்பாடல் வருகிற ஜூன் 25-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக ஒரு குட்டி புரோமோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் மாஸாக ரெட் கலர் மஹிந்திரா எலெக்ட்ரிக் காரில் வந்து இறங்கிய அனிருத், தோளில் சங்கிலியை போட்டுக்கொண்டு கெத்தாக கூலி ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *