Record Breaking Deal செய்த கூலி படம்… தரமான சம்பவம்

Record Breaking Deal செய்த கூலி படம்… தரமான சம்பவம்
  • PublishedJune 25, 2025

2025, இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு முன்னணி நடிகர்கள் அஜித், சூர்யா, தனுஷ் போன்றோர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது.

அடுத்து பாக்ஸ் ஆபிஸ் வேட்டையில் சம்பவம் செய்ய ரஜினியின் கூலி படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் அமீர்கான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். படத்திற்கு அனிருத் தான் இசை, வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.

ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க நடந்து வருகிறது. தெலுங்கில் இப்படத்தை Vedhaksara Movies Banner ராமாராவ் கூலி படத்தை வாங்க முன்னிலையில் உள்ளார்களாம்.

ரஜினியின் கூலி படத்தை ரூ. 46 கோடிக்கு மேல் பணம் கொடுத்து வாங்கி முன்வந்துள்ளார்கள் என தகவல் வந்துள்ளது. இது Record Breaking Deal என சினிமா வட்டாரங்களில் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *