இளம் நடிகை யுவினா பவித்ராவின் அழகிய போட்டோஷூட்

இளம் நடிகை யுவினா பவித்ராவின் அழகிய போட்டோஷூட்
  • PublishedJune 27, 2025

சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முதலில் தல அஜித் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் வீரம். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து தமன்னா, சந்தானம், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரகள் நடித்திருந்தனர்.

கடந்த 2014ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அண்ணன்- தம்பிகள் அவர்களுக்குள் இருக்கும் பாசம், காதல், அதிரடி ஆக்ஷன், காமெடி என எல்லாம் கலந்த கலவையாக இப்படம் வெளியானது. இதனால் விமர்சனம் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் யுவினா. குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்து ரசித்தவர் இப்போது முன்னணி நாயகி ரேஞ்சிற்கு வளர்ந்துவிட்டார்.

அவரின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது 16 வயதாகும் யுவினா, சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *