காதலரை கரம் படித்தார் பிரபல தமிழ் நடிகை… யார் தெரியுமா?

காதலரை கரம் படித்தார் பிரபல தமிழ் நடிகை… யார் தெரியுமா?
  • PublishedJuly 16, 2025

நடிகை தன்யா ரவிச்சந்திரன் தன்னுடைய காதலன் பற்றி முதன்முறையாக அறிவித்துள்ளார். தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை பதிவிட்டு தனக்கு திருமணமாக உள்ள தகவலையும் வெளியிட்டுள்ளார் தன்யா ரவிச்சந்திரன்.

அவர் கெளதம் ஜார்ஜ் என்கிற ஒளிப்பதிவாளரை தான் திருமணம் செய்துகொள்ள உள்ளாராம். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த அனபெல் சேதுபதி மற்றும் பாவனா நடித்த தி டோர் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் பென்ஸ் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார் கெளதம் ஜார்ஜ்.

கெளதம் ஜார்ஜை காதலித்து வந்த நடிகை தன்யா ரவிச்சந்திரன், குடும்பத்தினர் சம்மதத்தோடு அவரை கரம்பிடிக்க தயாராகி வருகிறார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் தற்போது நடந்து முடிந்துள்ளது.

அப்போது கெளதம் ஜார்ஜ் உடன் லிப் கிஸ் அடித்தபடி இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள தன்யா, ஒரு முத்தம், ஒரு வாக்குறுதிக்கு தான் ஒவ்வொரு ஃபிரேமும் வழிவகுக்கிறது. என்றென்றும்.. எப்போதும் என கெளதம் ஜார்ஜின் பெயரை குறிப்பிட்டு ஹார்டின் எமோஜியையும் பதிவிட்டுள்ளார் தன்யா. அவரின் இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *