இந்தியன் 3 பஞ்சாயத்து… அதிரடியாக களத்தில் இறங்கிய ரஜினி

இந்தியன் 3 பஞ்சாயத்து… அதிரடியாக களத்தில் இறங்கிய ரஜினி
  • PublishedJuly 18, 2025

ஷங்கர் – கமல் கூட்டணியில் வெளியான இந்தியன் 2 இதுவரை இல்லாத அளவுக்கு ட்ரோல்களை சந்தித்தது.

இதனால் பார்ட் 3 வெளிவருமா என்ற சந்தேகம் இப்போது வரை அனைவருக்கும் இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க மூன்றாம் பாகத்தில் கமலுடைய காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டது. இன்னும் சில வேலைகள் மட்டுமே பாக்கி இருக்கிறது.

ஆனால் அது தொடங்கப்படாத நிலையில் இந்தியன் – 2 பட தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தலைவர் ரஜினியிடம் இது பற்றி கூறியிருக்கிறார்.

இதற்கு இன்னும் 6 கோடி இருந்தால் படத்தை முடித்துக் கொடுத்து விடுவேன் என சங்கர் சொன்னாராம்.

இன்னும் 6 கோடியா என அதிர்ந்து போன சுபாஷ்கரன் ரஜினியிடம் 1.5 கோடியில் முடிக்க சொல்லுங்க என வேண்டுகோள் வைத்திருக்கிறார். தற்போது இரு தரப்பிடமும் இது குறித்து தலைவர் பேசி வருகிறார்.

விரைவில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவ்வளவு கம்மியான பணத்தில் எப்படி படத்தை முடிப்பது என ஷங்கர் கொஞ்சம் யோசனையில் இருக்கிறாராம்.

ஆனாலும் ரஜினி கேட்டுக் கொண்டதால் படத்தை முடித்து விடுவார் என தெரிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *