அமர்களம் – 2.. அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் அஜித்

அமர்களம் – 2.. அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் அஜித்
  • PublishedJuly 21, 2025

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர். தற்போது அஜித் “குட் பேட் அக்லி” படத்தின் மிகப்பெரும் வெற்றியையே கொடுத்துவிட்டு ரேஸிங்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில், மறுபடியும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ஒரு படத்தை கொடுக்க போகிறாராம் அஜித். இந்த தகவல் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

இந்த நேரத்தில் ரசிகர்களுக்காக மேலும் ஒரு சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்துள்ளார் அஜித்.

ஆமாம் அஜித் நடிப்பில் வெளிவந்த “அமர்க்களம்” படம் அப்போதைய காலக்கட்டத்தில் ஒரு மாபெரும் வெற்றி படமாகும். இதில் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவருமே இனைந்து நடித்திருப்பார்கள். இந்த படத்தின் மூலம் அஜித் நிறைய ரசிகர்களை பெற்றார்.

அமர்க்களம் படத்தின் இயக்குனர் சரண் மீண்டும் அஜித்துடன் இணைந்து படம் செய்யப்போவதாக பேச்சுவார்த்தை நடக்கிறதாம் இவ்வாறு வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.

இது அமர்க்களம்-2 க்கான பேச்சுவார்த்தையாக இருக்குமோ என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுகிறது. அப்படி அமர்க்களம்-2 ஆக இருந்தால் அஜித் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். இந்த கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும்.art

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *