ஹெல்ப் பண்ணுங்க – பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா கதறல்

ஹெல்ப் பண்ணுங்க – பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா கதறல்
  • PublishedJuly 23, 2025

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆனவர் தனுஸ்ரீ தத்தா. அப்படத்திற்கு பின் இந்தியில் பட வாய்ப்புகள் குவிந்ததால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

இந்தியில் ஆஷிக் பனாயா ஆப்னே, ரிஸ்க், ஸ்பீடு, அபார்ட்மெண்ட் போன்ற படங்களில் நடித்துள்ள அவர், கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின் சினிமாவை விட்டு விலகிவிட்டார்.

இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு மீடூ விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் தனுஸ்ரீ தத்தா. இந்நிலையில், அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தன் வீட்டில் தான் டார்ச்சர் செய்யப்படுவதாக கூறி இருக்கிறார்.

அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது :

“தனது வீட்டில் உள்ளவர்கள் வேலைக்காரர்களை வேண்டுமென்றே அறிமுகமில்லாத நபர்கள் நியமித்ததாகவும், பின்னர் அவர்கள் திருட்டு மற்றும் பிற சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறினார். இதனால், வீட்டு வேலைக்கு ஆட்களை நியமிப்பதைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், எல்லாவற்றையும் தானே கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

விஷயங்கள் மேலும் மோசமடைவதற்கு முன்பு பொதுமக்களும், அதிகாரிகளும் தலையிட்டு தன்னை காப்பாற்ற வேண்டும் என்று தனுஸ்ரீ வலியுறுத்தினார்.

இந்த துன்புறுத்தலால் நான் சோர்வடைந்துவிட்டேன். இது 2018 metoo முதல் நடந்து வருகிறது. இன்று சோர்வடைந்து போலீஸை அழைத்தேன். தயவுசெய்து யாராவது எனக்கு உதவுங்கள்! தாமதமாகும் முன் ஏதாவது செய்யுங்கள்.” என்று கண்ணீர்மல்க அந்த வீடியோவில் பேசி உள்ளார் தனுஸ்ரீ தத்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *