கேஜிஎஃப் பிரபலம் திடீர் மரணம்

கேஜிஎஃப் பிரபலம் திடீர் மரணம்
  • PublishedAugust 25, 2025

கேஜிஎஃப் திரைப்படத்தில் நடித்து பிரபலமான தினேஷ் மங்களூரு காலமானார்.

கன்னட நடிகரான தினேஷ் மங்களூரு பல கன்னட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றவர். இவர் கேஜிஎஃப் திரைப்படத்தில் ஷெட்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இரண்டு பாகங்களிலும் இவர் காட்சிகள் இருந்ததால் இந்தியளவில் கவனிக்கப்பட்டார்.

இந்த நிலையில், பக்கவாதத்திற்கான சிகிச்சையிலிருந்த தினேஷ் மங்களூரு இன்று அதிகாலை காலமானார்.

இவரது மறைவுக்கு சக நடிகர்கள், ரசிகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *