மனைவி குறித்து எமோஷனல் ஆக பேசிய சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த மதராசி படவிழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு தன் மனைவி குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஆர்த்தி என்னை மணந்தார். சினிமா என்பது ஒரு தொழில், திறமையானவர்களை எப்போதும் அங்கீகரிக்கும். ஆனால், எனக்கு நல்ல சம்பளம் கூட அந்த நேரத்தில் இல்லை.

ஆனால், என் மீது நம்பிக்கை வைத்து அவர் என்னை திருமணம் செய்து கொண்டார். அதற்காக நான் எப்போதும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன்” என்று கூறியுள்ளார்.