தனுஷை ஏமாற்ற நினைச்சேன்… விஜய்ஆண்டனி ஓபன்

தனுஷை ஏமாற்ற நினைச்சேன்… விஜய்ஆண்டனி ஓபன்
  • PublishedSeptember 10, 2025

தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கி இயக்குநர், பாடகர் என கலக்கிய பிரபலம் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமாகி பல ஹிட் படங்கள் கொடுத்த இவர் சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

சலீம், பிச்சைக்காரன் என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுக்க ரசிகர்கள் கவனிக்கும் நடிகராக வலம் வந்தார். தற்போது, விஜய் ஆண்டனி அவரது 25-வது படமான சக்தித் திருமகன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப். 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் விஜய் ஆண்டனி நடிகர் தனுஷ் குறித்து முன்பு பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” ரஜினிகாந்தின் மனைவி லதா மூலமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பழக்கமானார். ஒருநாள், அவர் கணவர் தனுஷுக்கு இசை மீது ஆர்வம் உண்டு. அவருக்கு உதவுமாறு ஐஸ்வர்யா கூறினார்.

பின் தொடர்ந்து, தனுஷ் என்னைச் சந்திக்க வந்தார். சரி, எதையேனும் இசையமைத்துக் காட்டி ஏமாற்றி அனுப்பிவிடலாம் என நினைத்தேன். ஆனால், தனுஷுக்கு இசை தெரிந்திருந்தது.

அதனால், அவர் வரும்போதெல்லாம் எனக்குப் பயமாகிவிட்டது. பின், அவர் கேட்டதை இசையமைத்துக் கொடுத்தேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *