ஜனநாயகன் எப்படி இருக்கு? பிரபலம் கொடுத்த அப்டேட்

ஜனநாயகன் எப்படி இருக்கு? பிரபலம் கொடுத்த அப்டேட்
  • PublishedSeptember 14, 2025

தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படம், விஜயின் கடைசி நடிகர் என்பதால் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்த படம், விஜயுடன் அவரது ஐந்தாவது கூட்டணி ஆகும்.

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில், ஜனநாயகன் படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் அளித்த பேட்டியில், “ஜனநாயகன் பற்றி நான் இப்போது ஏதாவது சொன்னால், எனக்கு வேலை போய்விடும்.

இதில் சொல்லிக்கொள்ள நிறைய சுவாரஸ்யங்கள் உள்ளன. விஜய் சாரின் விஜயிசம் 100% படம் முழுவதும் இருக்கும். அதற்கான பல தருணங்கள் ரசிகர்களை கவர்வதற்காக காத்திருக்கின்றன” என்று கூறியுள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *