ஒரே நாளில் வெளியான கிஸ், சக்தித் திருமகன் : ரேஸில் வென்றது யார்?

ஒரே நாளில் வெளியான கிஸ், சக்தித் திருமகன் : ரேஸில் வென்றது யார்?
  • PublishedSeptember 22, 2025

செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியான கிஸ் மற்றும் சக்தித் திருமகன் திரைப்படங்களின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனியின் 25-வது படமான சக்தித் திருமகன் மற்றும் நடிகர் கவினின் கிஸ் திரைப்படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியானது.

இதில், நல்ல விமர்சனங்களைப் பெற்ற சக்தித் திருமகன் இதுவரை ரூ. 3.65 கோடியையும் (தெலுங்கும் சேர்த்து) கலவையான விமர்சனங்களைப் பெற்ற கிஸ் திரைப்படம் ரூ. 1.6 கோடியையும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிப்பில் பழங்குடியினரின் வலிகளைப் பேசும் படமாக உருவான தண்டகாரண்யம் திரைப்படம் ரூ. 65 லட்சம் வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வார இறுதியில் பெரிய படங்களின் வெளியீடு இல்லையென்றாலும் சுமாரான வசூலையே இப்படங்கள் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *