விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்பெஷல் தீபாவளி

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்பெஷல் தீபாவளி
  • PublishedSeptember 23, 2025

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இயக்குநர் ஹெச். வினோத் சமீபத்தில் இப்படம் குறித்து பேசும்போது கூட, “பக்கா மாஸ் படம், விஜய் சார் ரசிகர்களுக்கு Full மீல்ஸ்” என கூறியிருந்தார். இது படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.

இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அனிருத் இசையில், தளபதி விஜய்யின் குரலில் பக்காவான மாஸ் பாடல் ஒன்று தயாராகியுள்ளதாம். இந்த பாடல் வருகிற தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

எப்போதுமே விஜய்யின் படத்தில் இருந்து வெளிவரும் முதல் பாடலுக்கு வரவேற்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். அதுவும் கடைசி படத்தின் முதல் பாடல் என்றால் சொல்லவே தேவையில்லை, ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *