விஜய் டிவி சீரியல் இயக்குனர் திடீர் மரணம்

விஜய் டிவி சீரியல் இயக்குனர் திடீர் மரணம்
  • PublishedSeptember 24, 2025

பிரபல சின்ன திரை இயக்குநர் ஆர்.டி. நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

இயக்குநர் நாராயணமூர்த்திக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

கடந்த ஒரு வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இயக்குநர் நாராயணமூர்த்தியின் இறுதி சடங்குகள் பம்மலில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஆர்.டி. நாராயணமூர்த்தி சன் தொலைக்காட்சியில் வெளியான நந்தினி தொடர் மூலம் சின்ன திரையில் நுழைந்தார். முதல் தொடரே மிகப் பெரிய வெற்றித் தொடராக அமைந்த நிலையில், தொடர்ந்து ராசாத்தி, ஜிமிக்கி கம்மல், அன்பே வா உள்ளிட்ட தொடர்களை இயக்கினார்.

தற்போது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகளே என் மருமகளே தொடரை இயக்கி வந்தார்.

இந்த நிலையில், இயக்குநர் ஆர்.டி. நாராயணமூர்த்தி மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *