கமலின் சாதனையை முறியடித்த த்ரிஷா தோசரை “மேடம்” என்ற கமல்

கமலின் சாதனையை முறியடித்த த்ரிஷா தோசரை “மேடம்” என்ற கமல்
  • PublishedSeptember 25, 2025

தேசிய விருது வென்ற சிறுமி த்ரிஷா தோசர்-க்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“எனது சாதனையை வென்ற நீங்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

டியர் மிஸ். த்ரீஷா தோசர், உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் என்னுடைய சாதனையை முறியடித்துள்ளீர்கள்.

என்னுடைய முதல் விருதை நான் ஆறு வயதில் பெற்றிருந்தேன். நீங்கள் இன்னும் நீண்ட காலம் பயணிக்க வேண்டும் மேடம்.

உங்களது திறமையினை மேலும் வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன் என்றார்.”

சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை சிறுமி ‘த்ரீஷா தோசர்’ வென்றார். இந்த விருதை வாங்க சேலை அணிந்துகொண்டு மேடைக்கு வந்ததில் அனைவரையும் கவர்ந்துவிட்டார்.

அவர் மேடையில் ஏறியதும் அந்த அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

2023 ஆம் ஆண்டு சுதாகர் ரெட்டி இயக்கத்தில் பிரபல இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே நடிப்பில் மராத்திய படமாக ‘நாள் – 2’ வெளியானது.

இதில், சிமி என்ற கதாபாத்திரத்தில் அப்போது 2 வயதேயான த்ரிஷா தோசர் நடித்திருந்தார். இளம் வயதில் தேசிய விருதை வென்றவர் என்ற சாதனையையும் த்ரிஷா தோசர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *