40 வயதில் மீண்டும் அம்மாவான பாலிவுட் நடிகை

40 வயதில் மீண்டும் அம்மாவான பாலிவுட் நடிகை
  • PublishedOctober 1, 2025

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளும் நடிகையுமான சோனம் கபூர், தனது நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.

திருமணத்துக்குப் பிறகும் படங்களில் நடித்து வந்த சோனம், கடந்த 2023ஆம் ஆண்டு ஷோக் மகிஜா இயக்கத்தில் உருவான பிலின்ட் படத்தில் முதன்மை பாத்திரத்தில் சோனம் கபூர் நடித்திருந்தார்.

தற்போது கருவுற்றிருப்பது உறுதியாகியுள்ளதால், சிறிது இடைவேளை எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு நடிகர் தனுஷ் உடன் இவர் நடித்த ராஞ்சனா படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இதனால், தமிழிலும் சோனம் கபூர் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *