‘கும்கி 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது… ஹீரோ யார் தெரியுமா?

‘கும்கி 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது… ஹீரோ யார் தெரியுமா?
  • PublishedOctober 5, 2025

‘கும்கி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியனா படம் ‘கும்கி’.

யானைக்கும் – மனிதனுக்கும் இடையிலான அன்பை பேசிய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படத்துக்கு டி.இமான் இசை பெரும் ப்ளஸ்ஸாக அமைந்தது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார் பிரபு சாலமன்.

இளைஞன் மற்றும் ஓர் யானை இடையேயான உறவை இந்தப் படம் பேசும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் அறிமுக நடிகர் மதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படம் வரும் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *