5 நாட்களில் 50 கோடி வசூலைக் கடந்த ‘இட்லி கடை’

5 நாட்களில் 50 கோடி வசூலைக் கடந்த ‘இட்லி கடை’
  • PublishedOctober 7, 2025

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த படம் “இட்லி கடை”. கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், வசூலிலும் கலக்கி வருகின்றது.

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் அருண் விஜய், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியாகி கடந்த 5 நாட்களில் 50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரமும் பெரிய படங்கள் இல்லாததால் வசூல் குறைய வாய்ப்பில்லை. ஐந்து நாட்களில் 50 கோடியை தொட்ட இட்லி கடைக்கு 100 கோடி வசூல் என்பது அருகில் தான் உள்ளது.

ஆகவே தனுஷ் இயக்கி நடித்த இந்தப் படமும் அவருக்கு வெற்றியைத்தரும் என்பதில் சந்தேகமில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *