துருவ் விக்ரம் மிரட்டியுள்ள பைசன் : வசூல் எவ்வளவு தெரியுமா?

துருவ் விக்ரம் மிரட்டியுள்ள பைசன் : வசூல் எவ்வளவு தெரியுமா?
  • PublishedOctober 18, 2025

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று வெளியாகியிருக்கும் படம் பைசன் காளமாடன்.

கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை மாரி செல்வராஜ் உருவாக்கியுள்ளார்.

இப்படத்தில் பசுபதி, லால், அமீர், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், பைசன் திரைப்படம் உலகளவில் முதல் நாள் 5 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *