ரூட்டை மாற்றி அதிரடி முடிவெடுத்த சந்தானம்…

ரூட்டை மாற்றி அதிரடி முடிவெடுத்த சந்தானம்…
  • PublishedOctober 30, 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்துக் காட்டியவர்களில் ஏராளமானோர் உள்ளனர்.

இதில் சிவகார்த்திகேயன் மற்றும் சந்தானம் ஆகியோரை உதாரணமாக குறிப்பிடலாம்.

அந்த வகையில் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் காமெடி ரோலில் நடித்து பின் ஹீரோவாக உருவாகியவர்தான் சந்தானம்.

ஒருகட்டத்தில் சந்தானம் இல்லாத புதிய படமே இல்லை என்ற அளவிற்கு ஆனது.

இதற்கு இடையில் சிம்பு கூப்பிட்டதால் பார்க்கிங் பட இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் சந்தானம் அவருடன் இணைந்து நடிக்க உள்ளார்.

தற்போது இன்னொரு தகவல் என்னவென்றால் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ஜெயிலர் 2 படத்தில் சந்தானம் காமெடி நடிகராக நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது.

மீண்டும் சந்தானம் காமெடி டிராக் மாறியுள்ளார் என்ற தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அப்படி நடந்தால் அதும் சிறப்பாகவே அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *