பாலகிருஷ்ணாவின் பட ரீமேக் தான் “ஜனநாயகன்“? வெளிவந்த ஆதாரம்

பாலகிருஷ்ணாவின் பட ரீமேக் தான் “ஜனநாயகன்“? வெளிவந்த ஆதாரம்
  • PublishedNovember 9, 2025

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் இறுதி படமான ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது.

இந்த பாடல் வந்ததில் இருந்து பல சாதனைகளை படைத்து வருகின்றது. மேலும் சர்ச்சைகளையும் சில கதைகளையும் உடன் கொண்டு வருகின்றது.

அதாவது ஜனநாயகன் ஆரம்பித்தில் இருந்தே தெலுங்கில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்கிற பேச்சு இருக்கிறது.

பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி தெலுங்கில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

விஜய்க்கு பகவந்த் கேசரி படத்தை தமிழில் ரீமேக் செய்யவேண்டும் என்கிற ஆசை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பகவந்த் கேசரி படத்தில் பாலகிருஷ்ணா, காஜல் மற்றும் ஸ்ரீலீலா ஒன்றாக சேர்ந்து நடனமாடுவது போல் ஜனநாயகன் படத்திலிருந்து வெளிவந்த தளபதி கச்சேரி பாடலில் விஜய், பூஜா மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடனமாடுகிறார்கள்.

மேலும் பகவந்த் கேசரி படத்தில் ஸ்ரீலீலா கழுத்தில் அணிந்திருந்த செயின் போலவே மமிதா பைஜூ இப்படத்தில் அணிந்துள்ளார்.

இப்படி பல விஷயங்கள் ஒத்துப் போவதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். சிலர் இதனை ட்ரோல் செய்கிறார்கள்.

திரை வட்டாரத்தில் பேசுவது என்னவென்றால், பகவந்த் கேசரி படத்தில் இருந்த சில காட்சிகள் இப்படத்திலும் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் உள்ள அரசியலையும் ஜனநாயகன் பேசியிருக்கிறது. அதுதான் இயக்குநர் ஹெச். வினோத்தின் டச் என கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *